நித்ய அன்னதான கூடம், காஞ்சிபுரம்
நமது சனாதனமான இந்து தர்மம் பல்வேறு நற்பண்பு குணங்களை பின்பற்றும் வழிகளை போதித்து வருகிறது. அப்படி பட்ட நற்பண்பு குணங்களில் மிக சிறப்பான ஒன்று தான் அன்ன தானம்.
அன்ன தானம் என்றால் தகுதியுள்ளவர்களுக்கு அன்னம் வழங்குவது, உதாரணதிற்க்கு சந்யாசிகளுக்கு பிக்க்ஷை அளிப்பது, கோவில் தரிசனதிர்காக மிக தூரம் பயணிக்கும் யாத்ரிகளுக்கு உணவளிப்பது, மற்றும் இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பது. கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அன்னதானத்தின் சிறப்பை பற்றி மிக தெளிவாக விளக்குகிறார். நம்முடைய சாஸ்திரம் மற்றும் கலாச்சாரத்தை ஒட்டி கிரிஹஸ்த தர்மத்தை அனுஸ்ரைப்பவர்கள் விருந்தாளிகளுக்கு உணவளித்த பிறகு தான் அவர்கள் ஆஹாரம் எடுத்து கொள்வார்கள்.
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பல்வேறு இடத்தில் கிளைகள் அமைத்து தவறாமல் அன்ன தானம் செய்து வருகிறார்கள். இதை தவிர விசேஷங்களை ஒட்டியும் மற்றும் முக்கிய தேவையின் போதும் சிறப்பாக அன்ன தானம் செய்து வருகிறார்கள். காஞ்சிபுரதில் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருகோவில் அருகே ஒரு அன்ன தான கூடம் ஸ்ரீமடத்தால் நிருவபட்டிருகிறது. தினம்தோறும் சுமார் 500 க்கும் மேற்பட்ட யாத்ரிகள் மதிய வேளையில் இங்கு இலவசமாக உணவு அருந்துகிறார்கள்.
காஞ்சிபுரதில் இருக்கும் ஏகாம்பரேஷ்வரர் மற்றும் பல்வேறு கோவில்களில் உணவு சீட்டுகள் வழங்க படுகிறது. இந்த திட்டத்தால் சரியான யாத்ரிகளுக்கு உணவு சென்று அடைகிறது. சாப்பாடு அறை நல்ல விஸ்தாரமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கிறது. இந்த உலகுக்கே உணவு அளிக்கும் தேவி அன்னபுரணியின் மிக அழகான ஒரு சிலா ரூபம் சாப்பாடு அறையில் இருக்கிறது. இந்த அழகான சிலை
சாப்பிடும் யாத்ரிகளுக்கு ஒரு தெய்வீகமான மற்றும் புனிதமான சுற்றுப்புறதோற்ற அமைப்பை தருகின்றது. அன்ன தான கூடத்தை ஒட்டி ஒரு சமயல் அறை இருக்கிறது. சமைப்பதற்க்கு தேவையான எல்லா துணைப்பொருட் சாதனங்களும் இங்கு இருக்கிற படியால் நல்ல சூடான மற்றும் புதிதான உணவை நிறைய யாத்ரிகளுக்கு வழங்க வசதியாக இருக்கிறது.
அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அன்ன தான கூடத்தின் தனிபட்ட கட்டட அமைப்பும், சுற்றுப்புறமும், எழில் கொஞ்சும் பசுமையும் அமைந்து இருக்கிறது.